கைப்பம்பில் தண்ணீர் இல்லை; கடும் சிரமத்தில் கிராம மக்கள்.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட கொடுமுடி பேரூராட்சியில் போர்வெல் அடி பைப்பில் பல மாத காலமாக தண்ணீர் வராததால் அப்பகுதி பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாக குற்றம் சாட்டி வருகின்றனர், இங்கு சுமார் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் வசித்துவரும் நிலையில் இங்கு தண்ணீர் வராததால் இரண்டு கிலோமீட்டர் நடந்து சென்று தண்ணீரை எடுத்து வரும் சூழலில் தற்போது இருந்து வருவதாக பொதுமக்கள் தங்களது வேதனையை தெரிவித்து வருகின்றனர்
அதனால் வேலைக்கு செல்பவர்கள், பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகள், முதியோர்கள், போன்றோர் மிகவும் பாதிப்புக்கு உள்ளதாகவும் மேலும், இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதாக அப்பகுதி மக்கள் புகாரை தெரிவிக்கின்றன
ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வந்து உடனடியாக அடி பைப்பை சீரமைத்து அதில் தண்ணீர் வர ஏற்பாடு செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments