கோமுகி ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் பொது மக்களுக்கு அறிவிப்பு..
தமிழகத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவ மழை காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கச்சிராயபாளையம் அருகே உள்ள கோமுகி அணையின் மொத்த கொள்ளளவு 46 அடி ஆகும்.
இதில் 44 அடி நீர் நிரம்பியுள்ளதால் இதனால் பாதுகாப்பு நலன் கருதி 300 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. தற்பொழுது பெய்து வரும் கனமழையின் காரணமாக அணை வேகமாக நிரம்பி வருகிறது. எனவே
அணைக்கு நீர்வரத்து அதிகமானால் அந்த நீரையும் சேர்த்து வெளியேற்றப்படுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக
கோமுகி அணையின் கரையோர பகுதிகளில் வசிக்கும் நல்லாத்தூர் , குறிச்சி, மட்டிகை, கள்ளக்குறிச்சி, நீலமங்கலம், தென் கீரனூர், விருகாவூர், அசகளத்தூர் ஆகிய கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்குமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments