மமக தூத்துக்குடி மாவட்ட தலைவராக அகமது இக்பால் மற்றும் நிர்வாகிகள் தேர்வு தமுமுக, மமக தூத்துக்குடி மாவட்ட தலைவராக அகமது இக்பால் மற்றும் நிர்வாகிகள் தேர்வு.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநிலத் துணைத் தலைவர் ஹமீது தலைமை வகித்தார். தமுமுக மாநில செயலாளர் சிவகாசி முஸ்தபா தேர்தல் அதிகாரியாக இருந்து தேர்தலை நடத்தினார். தலைமை நிர்வாக குழு உறுப்பினர் ஜோசப் நொலஸ்கோ, தலைமைக் கழக பேச்சாளர் மௌலவி காசிம் பிர்தௌசி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில் தமுமுக, மமக தூத்துக்குடி மாவட்ட தலைவராக அகமது இக்பால், தமுமுக மாவட்ட செயலாளராக யூசுப், மமக மாவட்ட செயலாளராக அஸ்மத்உசேன், தமுமுக, மமக மாவட்ட பொருளாளராக ஐதுரூஸ் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
கூட்டத்தில், பாலஸ்தீனத்தின் மீதும், பொதுமக்கள் மீதும் தொடர்ந்து குண்டுகளை வீசி இனப்படுகொலை செய்து வரும் இஸ்ரேலிய பயங்கரவாதத்தை கண்டிக்கிறோம். உடனடியாக ஐநா போர் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒன்றிய அரசு இஸ்ரேல் உடனான தூதரக உறவை முறித்துக் கொள்ள வேண்டும். ஒன்றிய மோடி அரசு இஸ்ரேல் உடனான வர்த்தகத்தை முறித்துக் கொள்ள வேண்டும். தமிழ்நாடு அரசு இஸ்ரேலோடு எந்த வர்த்தக தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது, தமிழக மக்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வரும் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- செ.அந்தோணி இன்பராஜ், தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர். -9952860724
No comments