மாதனூரில் ரூ10 லட்சம் மதிப்பீட்டில் புதிய பகுதி நேர நியாயவிலை கடை திறப்பு விழா.
திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஊராட்சி ஒன்றியம் தேவலாபுரம் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ 10 லட்சம் மதிப்பீட்டில் புதிய பகுதி நேர நியாயவிலை கடை கட்டிடத்தை ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் மாதனூர் ஒன்றிய திமுக செயலாளர் ஒன்றிய பெருந்தலைவர் அகரம்சேரி ப.ச.சுரேஷ்குமார் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்து விற்பனை தொடங்கி வைத்தார்கள்.
இந்நிகழ்வில் மாதனூர் திமுக மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் சா.சங்கர், மாவட்ட பிரதிநிதிகள் முரளி, காசி ஒன்றிய குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன் காயத்ரிதுளசிராமன், ஆ.கார்த்திக் ஜவகர் ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி குபேந்திரன், கரும்பூர் ஊராட்சி மன்ற தலைவர், மோகேஷ் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் உஷாராணி குரு வாசன், கூட்டுறவு சங்க செயலாளர், ரங்கநாதன் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் கிளைக்கழக நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments