தூத்துக்குடியில் புதிய இசிஆர் ஆட்டுச்சந்தையை அமைச்சர் கீதாஜீவன் துவங்கி வைத்தார்!
தூத்துக்குடி கிழக்குக்கடற்கரை சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இசிஆர் ஆட்டுச்சந்தையை அமைச்சர் கீதாஜீவன் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். தூத்துக்குடி, கோமஸ்புரத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இசிஆர் ஆட்டுச்சந்தை துவக்க விழா நடைபெற்றது. விழாவில், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை வகித்தார். தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் அம்பாசங்கர் முன்னிலை வகித்தார்.
தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் வசுமதி அம்பாசங்கர் வரவேற்றார். நிகழ்ச்சியில், வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் பங்கேற்று ரிப்பன் வெட்டி புதிய இசிஆர் ஆட்டுச்சந்தையினை திறந்து வைத்தார். பின்னர், திருவிளக்கேற்றி முதல் டோக்கனை வழங்கி சந்தையில் விற்பனையை ஆரம்பித்துவைத்தார். தொடர்ந்து அமைச்சர் கீதாஜீவன் ஒரு ஆட்டுக்கிடா மற்றும் குட்டியுடன் ஒரு பெட்டையாடு வாங்கி முதல் விற்பனையை துவக்கி வைத்தார். தொடர்ந்து ஆட்டுச்சந்தை வளாகத்தில் மரக்கன்று நட்டுவைத்தார்.
நிகழ்ச்சியில், திமுக மாணவரணி ஜே.பி.ஆர்.ரமேஷ், தகவல்தொழில்நுட்ப அணி மாரிசெல்வம், கிளைச் செயலாளர் உலகநாதன் மற்றும் நட்டார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments