Breaking News

வாயலூர் அருகே புதிய பெட்ரோல் விற்பனை நிலையத்தை எண்ணெய் நிறுவன அதிகாரிகள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.


திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த வாயலூர் கிராமத்தில் பாரத் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனத்தின் சார்பில் பெட்ரோல் விற்பனை நிலையம் புதியதாக நிறுவப்பட்டது. ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் மனோகர் என்பவரது மகன் கார்த்திக், கணேஷ் பெட்ரோலியம் என்ற பெயரில் புதிய பெட்ரோல் விற்பனை நிலையத்தை நிறுவினார். பெட்ரோல், டீசல், சி.என்.ஜி.எரிவாயு உட்பட அனைத்து எரிபொருளும் நிரப்பிடும் வகையில் புதிய விற்பனை நிலையம் நிறுவப்பட்டது. 

இந்த பெட்ரோல் விற்பனை நிலையத்தை பாரத் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து அங்கு வந்த கார் ஒன்றிற்கு பெட்ரோல் நிரப்பி விற்பனையை தொடங்கி வைத்தனர். முதல் நாள் என்பதால் பெட்ரோல், டீசல் நிரப்பிய வாகனங்களுக்கு பல்வேறு நினைவு பரிசுகளும் சலுகை கூப்பன்களும் வழங்கப்பட்டன. மேலும் பெட்ரோல் நிரப்ப வந்த வாகனங்களுக்கு கட்டாயம் ஹெல்மெட், சீட் பெல்ட் அணிய வேண்டும், செல்போனில் பேசி கொண்டு வாகனம் ஓட்ட கூடாது போன்ற சாலை விதிகளும் எடுத்துரைக்கப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியில் மண்டல ஒருங்கிணைப்பாளர் அருண் கண்டிகொண்டா, பொறுப்பாளர் ராஜ்புட், பொறியியல் அதிகாரி ஸ்வேதா, விற்பனை மூத்த மேலாளர் மணீஷ், விற்பனை மேலாளர் கௌதம் குமார் உட்பட எண்ணெய் நிறுவன அதிகாரிகள், கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர். 

No comments

Copying is disabled on this page!