நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்பாக வெள்ளம் ஏற்படும் இடங்களை நேரில் சென்று ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என நெல்லை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சந்தீப் நந்தூரி பேட்டி
இதை தொடர்ந்து நெல்லை மாவட்ட கண்காணிப்பாளர் சந்திப்பு சந்தீப் நந்தூரி மற்றும் நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் கூட்டாக செய்தியாளர்கள் சந்தித்தார் அப்போது அவர் கூறும் போது, திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ளம் தொடர்பான தகவலை பொதுமக்களுக்கு தெரிவிப்பதற்காக 4000 பேர் தன்னார்வர்கள் மூலமாக தகவல் தெரிவிப்பதற்காக செய்யப்பட்டது.
நெல்லை மாவட்டத்தில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் ராதாபுரத்தை தற்போது புதிதாக அமைக்கப்பட்டுள்ளது அவர்கள் நெல்லை மாவட்டத்தில் 72 இடங்களை வெள்ளம் பாதிப்பு ஏற்படலாம் என கண்காணிக்கப்பட்டுள்ளது, மாவட்டத்தில் 5590 கர்ப்பிணி பெண்கள் கண்காணிக்கப்பட்டு கனமழை புயல் போன்ற எச்சரிக்கை இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து வந்து பிரசவம் செய்வதற்கும் ஏற்பாடு செய்யப்படும் மருத்துவ முகாம்கள் தயார் நிலை வைக்கப்பட்டுள்ளது.
மாஞ்சோலை காரையார் உள்ளிட்ட மலை பகுதிகளுக்கு முன்கூட்டியே ரேஷன் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது மூன்று மதங்களுக்கு தேவையான உணவுகள் ரேஷன் கடைகளில் கையில் வைக்கப்பட்டுள்ளது, கால்வாய் அனைத்தும் தூர்வாரப்பட்டுள்ளது வெள்ள காலங்களில் மக்களை மீட்பதற்கு 98 படகுகள் தயார் நிலை வைக்கப்பட்டுள்ளது இவ்வாறு அவர் தெரிவித்தார்.
No comments