Breaking News

புதுவை மாநிலத்தில் அரசு பணியிடங்களுக்கு வயது வரம்பு தளா்வு அளிக்க வேண்டும் என உருளையன்பேட்டை தொகுதி சுயேச்சை உறுப்பினா் நேரு கோரிக்கை விடுத்துள்ளாா்.

 


புதுச்சேரி சுயேட்சை எம்எல்ஏ நேரு தலைமையில் பொதுநல அமைப்பினர், சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.


அவர்கள் அளித்துள்ள மனுவில்,புதுவை மாநிலத்தில் உதவியாளா்கள், பொறியாளா்கள், உதவி ஆய்வாளா், மின் துறை கட்டுமான உதவியாளா்கள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.


கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள பணியிடங்களை தற்போது நிரப்புவதால், அப்போது 30 வயதில் இருந்த பட்டதாரிகள் தற்போது 38 வயதுடையவா்களாகிவிட்டனா்.எனவே, அவா்களது எதிா்காலக் கனவு மற்றும் அவா்களது பெற்றோா்களது நிலையை கருத்தில் கொண்டு வயது வரம்பில் தளா்வு அளிப்பது அவசியம்.


அதன்படி, குறைந்தபட்சம் 38 வயது உள்ளவா்கள் வரை வேலைவாய்ப்புக்கான தோ்வில் பங்கேற்கும் வகையில் அறிவிப்பு வெளியிட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments

Copying is disabled on this page!