நெல்லை பழையபேட்டை இந்துக்கள் வசிக்கும் பகுதிக்கு உரிமை கொண்டாடும் வக்பு வாரியம்- பிரச்சனை பேச்சுவார்த்தை தோல்வி திட்டமிட்டபடி நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என இந்து முன்னணி மற்றும் ஊர் பொதுமக்கள் அறிவிப்பு.
நெல்லை மாநகரம் பழையபேட்டையில் 5 தலைமுறைகளுக்கும் மேலாக 2000 இந்துக்கள் வசிக்கும் பகுதியை திடீரென சொந்தம் கொண்டாடும் வாரியம் இந்துக்கள் வசிக்கும் பகுதிக்கு பத்திரப்பதிவு, புதிய மின் இணைப்பு நிறுத்தம் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து பல வருடங்கள் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் இந்துமுன்னணியும் பொது மக்களும் இணைந்து நாளை ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் இதுகுறித்து இன்று திருநெல்வேலி தாசில்தார் திருமதி ஜெயலெட்சுமி அவர்கள் தலைமையில் சமாதான பேச்சு வார்த்தை நடைபெற்றது.
இதில் அரசுத்தரப்பில் கண்டியப்பேரி கிராம நிர்வாக அலுவலர் அந்தோணி பேட்டை காவல் ஆய்வாளர் திருமதி ஜீடி ஆகியோரும் பொதுமக்கள் தரப்பில் இந்துமுன்னணி மாவட்ட தலைவர் சுரேஷ் மாவட்ட பொதுச் செயலாளர் பிரம்மநாயகம் சத்ரபதி வீரசிவாஜி மக்கள் இயக்கம் அமைப்புசெயலாளர் ஐயப்பன் இந்துமுன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார் பழையபேட்டை அனைத்து சமுதாயத்தலைவர்கள் செல்வராஜ், முருகன் , ரவி, ராமையா, முருகன், மணி, மாரியப்பன், தங்கராஜ், செல்வகுமார், சுப்பிரமணியன், கார்த்திக், மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர்
சமாதான பேச்சுவார்த்தையில் பத்திரப்பதிவு மற்றும் மின் இணைப்பு உள்ளிட்ட இந்து மக்கள் கோரிக்கை குறித்து தாசில்தார் எந்த உறுதிமொழியும் வழங்க முன்வராத நிலையில் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது நாளை மாலை 4மணிக்கு பழையபேட்டை மெயின்ரோடு பரிவேட்டைமடம் அருகில் திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என இந்து முன்னணி மற்றும் ஊர் பொதுமக்கள் அறிவித்துள்ளனர்.
அனைத்துப்பகுதி இந்துக்களும் அனைத்து சமுதாய தலைவர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு ஆதரவு தெரிவிக்குமாறு இந்துமுன்னணி வேண்டுகோள் விடுத்துள்ளது
No comments