மீஞ்சூர் அருகே நவராத்திரி விழாவில் 7ஆம் நாள் உற்சவம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் அடுத்த பாலாஜி நகரில் அமைந்துள்ள அருள்மிகு அபிராமி அம்பாள் சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் நவராத்திரி விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒன்பது நாட்களும் அம்பாள் வெவ்வேறு அலங்காரங்களில் வெவ்வேறு வண்ண உடை அணிந்து பக்தர்களுக்கு காட்சியளித்து அருள் பாலித்து வருகிறார்.
7ஆம் நாள் உற்சவத்தின் போது சாம்பவிரூபி என்கிற சந்தான லட்சுமி வடிவத்தில் இளஞ்சிவப்பு வண்ண ஆடை உடுத்தி அம்பாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏழாம் நாள் உற்சவத்தை முன்னிட்டு சிவமுருகன் யோகா மையம் சார்பில் யோகாசன நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
No comments