தேசிய தன்னார்வ ரத்த தான தினத்தை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் எம்.எஸ் பிரசாந்த் அவர்கள் ரத்த தான முகாம் ஒருங்கிணைப்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. எம் எஸ் பிரசாந்த் அவர்கள் ரத்த தானத்தை பற்றியும் அதன் அவசியத்தை பற்றியும் ரத்தக் கொடையாளர்களிடம் உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து ரத்ததான முகாம் ஒருங்கிணைப்பாளருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார் இந்நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் திரு. நேரு மற்றும் உளுந்தூர்பேட்டை மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் மருத்துவர் திரு.அன்புமணி மற்றும் மாவட்ட குருதி பரிமாற்று அலுவலர் திரு. விஜயகுமார் மற்றும் உளுந்தூர்பேட்டை குருதி மைய அலுவலர் மருத்துவர் திரு. சதா வெங்கடேசன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு மாவட்டத் திட்ட மேலாளர் திருமதி கவிதா திருமலை அவர்கள் நன்றி கூறினார் உடன் மருத்துவர்கள் செவிலியர்கள், ரத்ததான கொடையாளர்கள், சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்*
No comments