தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணி; கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி, முத்துநகர் கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணியினை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தொடங்கி வைத்தார். உடன், அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் பங்கேற்றனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, தூத்துக்குடி மாநகர கடற்கரை பகுதிகளை சுத்தமாக வைத்திருக்கும் நோக்கில் பல்வேறு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் இ.எப்.ஐ தொண்டு நிறுவனம் இணைந்து முத்துநகர் கடற்கரை பகுதிகளை தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி பங்கேற்று தூய்மைப்பணியை தொடங்கி வைத்து, பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுடன் முத்துநகர் கடற்கரை பூங்காவில் பிளாஸ்டிக் மற்றும் குப்பைகளை சேகரித்து அகற்றும் பணியில் ஈடுபட்டார்.
இதில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைதுறை அமைச்சர் கீதாஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட கலெக்டர் இளம்பகவத், மாநகராட்சி ஆணையர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா, இ.எப்.ஐ. நிறுவனர் அருண் கிருஷ்ணமூர்த்தி மற்றும் திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மண்டலத் தலைவர்கள் நிர்மல், அன்னலட்சுமி, திமுக மீனவரணி துணை செயலாளர் புளோரன்ஸ், பொது குழு உறுப்பினர் கோட்டு ராஜா, மாவட்ட திமுக மகளிரணி அமைப்பாளர் கவிதாதேவி, மருத்துவர் அணி தலைவர் அருண்குமார், பகுதி செயலாளர்கள், சுரேஷ்குமார், மேகநாதன், மாநகர மீனவரணி அமைப்பாளர் டேனியல், துணை அமைப்பாளர் சேசையா, தகவல் தொழில்நுட்ப அணி தொகுதி ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை, மாமன்ற உறுப்பினர்கள் எடிங்ண்டா, பவானி, ரெக்ஸ்லின், சரவணகுமார், நாகேஸ்வரி, ஜெயசீலி, வைதேகி, சுப்புலட்சுமி, வட்ட செயலாளர்கள் டென்சிங், கதிரேசன், பாலு, போல்பேட்டை திமுக பிரதிநிதிகள் பிரபாகரன், ஜேஸ்பர், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments