ஈரோட்டில் பல வருட காலமாக பராமரிப்பு இன்றி காணப்படும் முத்தம்பாளையம் குளம்.
ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியான முத்தம்பாளையம் பகுதியில் ஈரோடு மாநகராட்சி சொந்தமாக குளம் ஒன்று பல வருடத்திற்கு முன்பாக நிறுவப்பட்டது, மாநகராட்சிக்கு சொந்தமான இந்த குளம் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை நிதியின் திட்டத்தின் கீழ் கடந்த 2016-17 ஆண்டு குளத்தை புனரமைக்கப்பட்டு நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குளத்தில் மழைநீர் சேகரிக்கப்பட்டு மற்றும் கீழ்பவானி கசிவு நீர் சேமிக்கப்படுவது வழக்கம் இந்நிலையில் பல வருட காலமாக இந்த புகழ்பெற்ற முத்தம்பாளையம் குளத்தை தூர் பரப்படாமலும் சரியான வகையில் பராமரிப்பு இன்றி காணப்படுவதால் குலம் முழுவதும் செடி கொடிகள் என படர்ந்து கிடக்கிறது.
ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக முன் வந்து நடவடிக்கை மேற்கொண்டு இந்த குளத்தை தூர்வாரி பராமரிப்பு செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments