சீர்காழி தேர் கீழ வீதியில் புதிதாக அமைக்கப்பட்ட சாலையில் மரண பள்ளங்கள் வாகன ஓட்டிகள் அச்சம்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட தேர்கீழவீதி,பாரதிதாசன் தெரு ஆகிய நகராட்சி சாலை வழியாக தான் ஈசானிய தெரு, செம்மங்குடி, வடகால் , கடவாசல், எடமணல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் சென்று வருகின்றன. அதேபோல் மேற்கண்ட கிராமங்களில் இருந்து வரும் பெரும்பாலான வாகனங்கள் அரசு பேருந்து கனரக வாகனங்கள் ஆகியவை தெற்கிலே வைத்த சாலை வழியாக தான் சீர்காழி பேருந்து நிலையம் வரவேண்டும் இந்த பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் புதிதாக சாலை அமைக்கப்பட்டது இந்த சாலை வழியாக அதிக அளவில் மண் லாரிகள் சென்று வந்ததால் சாலை சேதம் அடைந்து சாலையில் ஆங்காங்கே இரண்டு அடி ஆழம் மரண பள்ளங்கள் உருவாகின்றது இதனால் வாகன ஓட்டுகள் பெரிதும் ஆவதி அடைந்தனர் இரவு நேரங்களில் சாலையில் உள்ள பள்ளம் சரியாக இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தெரியாமல் உள்ளதால் பெரும் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது ஆகையால் நகராட்சி நிர்வாகம் சாலையில் உள்ள பள்ளங்களை தரமாக சரி செய்து புதிதாக சாலை போடவேண்டும் என வாகன ஓட்டிகள் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
No comments