ஜெயமூர்த்தி அறக்கட்டளை நடத்திய மாபெரும் இலவச மருத்துவ பரிசோதனை முகாமில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
ஜெயமூர்த்தி அறக்கட்டளை சார்பில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் முருங்கப்பாக்கம் ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்திடலில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஜெயமூர்த்தி அறக்கட்டளை தலைவர் விஜயலட்சுமி ஜெயமூர்த்தி மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.
இந்த மருத்துவ முகாமில் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள் கலந்து கொண்டு கண்ணில் புறை, கண்ணில் பூ விழுதல், ரத்த அழுத்தம், ஆகியவை குறித்து சிகிச்சையும் ஆலோசனைகளும் வழங்கினார்கள்.
அதேபோன்று எம்.வி. ஆர் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள் கலந்து கொண்டு ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், ரத்த பரிசோதனை, இ.சி.ஜி எலும்பு தேய்மானம், பற்றிய இலவச மருந்துகள் மற்றும் ஆலோசனைகளையும் வழங்கினர்.
முகாமில் சிறப்பு விருந்தினராக கதிர்காமம் தொகுதி திமுக பிரமுகர் வடிவேல், முன்னாள் வட்டார காங்கிரஸ் தலைவர் சிவராமகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இந்த இலவச மருத்துவ முகாமில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
No comments