மக்கள் தலைவர் வ.சுப்பையா நினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கு அமைச்சர்கள் லட்சுமி நாராயணன்,சரவணன் குமார்,எதிர்க்கட்சித் தலைவர் சிவா மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
மக்கள் தலைவர் வ. சுப்பையாவின் நினைவு நாள் புதுச்சேரி அரசு சார்பில் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி நெல்லித்தோப்பு சந்திப்பில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அமைச்சர்கள் லட்சுமி நாராயணன்,சரவணன் குமார்,சட்டப்பேரவைத் துணைத்தலைவர் ராஜவேலு,எதிர்க்கட்சித் தலைவர் சிவா, சட்டமன்ற உறுப்பினர்கள் ரமேஷ்,சம்பத்,செந்தில்குமார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சலீம் தலைமையில், கம்யூனிஸ்ட் கட்சியினர் சுப்பையா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
No comments