தூத்துக்குடி என்டிபிஎல் அனல்மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்களுக்கு அமைச்சர் கீதாஜீவன் இனிப்பு வழங்கி தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.
தூத்துக்குடி என்டிபிஎல் அனல்மின் நிலைய ஒப்பந்தத் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சங்கத்தின் பொதுச் செயலாளருமான கீதாஜீவன் கலந்து கொண்டு சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு தீபாவளி திருநாளை முன்னிட்டு இனிப்புகள் மற்றும் பரிசுகள் வழங்கினார்.
இதில், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், தொமுச மாவட்ட கவுன்சில் செயலாளர் சுசி ரவீந்திரன், தூத்துக்குடி அனல் மின் நிலைய தொமுச செயலாளர் சக்திவேல், தொமுச சட்ட ஆலோசகர் வழக்கறிஞர். சீனிவாசன், என்டிபிஎல் ஒப்பந்த தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் அமைப்புச் செயலாளர் அன்பழகன், தலைவர் முத்துராஜ், துணைத்தலைவர் சங்கர், துணைச் செயலாளர் ஆறுமுகம், துணை பொருளாளர் அழகுபாண்டி, அலுவலக செயலாளர்கள் சங்கர், முருகப்பெருமாள், நிர்வாக உறுப்பினர்கள் சுடலைமுத்து, இமாம், சாமிக்கண்ணு, மணிகண்டன், விக்கி, நவீன், பனிமயம், செந்தூரப்பாண்டி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமிநாதன், மாவட்ட மருத்துவர் அணி தலைவர் அருண்குமார், மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண் சுந்தர், மாநகர தொழிலாளர் அணி அமைப்பாளர் முருகஇசக்கி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
No comments