கலைஞர் நூற்றாண்டு விழா: பேச்சுப்போட்டியில் தேர்வானவர்களுக்கு அமைச்சர் கீதாஜீவன் வாழ்த்து.
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக இளைஞரணி சார்பில் மாவட்டந்தோறும் நடத்தப்பட்ட என் உயிரினும் மேலான எனும் தலைப்பிலான பேச்சுப் போட்டியில் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் இருந்து மாநில அளவிலான போட்டிக்கு தேர்வான மில்லர்புரம் பகுதியைச் சேர்ந்த சஞ்சய், கீழமுடிமண் பகுதியைச் சேர்ந்த உமாராணி ஆகியோருக்கு தூத்துக்குடி கலைஞர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் வாழ்த்து தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட பொருளாளர் சுசி ரவீந்திரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதியழகன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ராதாகிருஷ்ணன், பிரதீப், மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண் சுந்தர், துணை அமைப்பாளர்கள் சங்கர நாராயணன், பிரவீன் குமார், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் அன்பழகன், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் சின்னதுரை, மாவட்ட பிரதிநிதி சக்திவேல், மாவட்ட மருத்துவர் அணி தலைவர் அருண்குமார், மாவட்ட தகவல்தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமிநாதன், மாநகர தொழிலாளர் அணி அமைப்பாளர் முருகஇசக்கி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
No comments