Breaking News

மாணவர்கள் ஆசிரியர்கள், பெற்றோர் கூறும் அறிவுரைகளை ஏற்று, அவர்களது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வேண்டும் தூத்துக்குடியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேச்சு.


ஆசிரியர்கள், பெற்றோர் கூறும் அறிவுரைகளை ஏற்று அவர்களது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் மாணவர்கள் படிக்க வேண்டும் என தூத்துக்குடி கால்டுவெல் பள்ளியில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.

தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஆசிரியர் ஜெயக்குமார் ஆரம்ப ஜெபம் செய்தார். பள்ளி தாளாளர் ஸ்டேன்லி வேதமாணிக்கம் வரவேற்றார். நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் கலந்து கொண்டு 99 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். 

பின்னர் அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில், இந்த பள்ளி பல்வேறு சாதனையாளர்களை உருவாக்கியுள்ளது. தரமான கல்விகளை வழங்கி தமிழ் சமுதாயம் வளர வேண்டும் என்ற எண்ணத்தில் பள்ளி கல்வி, உயர்கல்வி ஆகியவற்றில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்த அரசு அக்கறை செலுத்தி வருகிறது. 

அரசு பள்ளி மட்டுமின்றி, அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் தமிழ்புதல்வன் திட்டத்தின் மூலம் பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரிக்கு செல்லும் மாணவர்களுக்கு அரசு சார்பில் ரூபாய் ஆயிரம் வழங்கப்படுகிறது. அது, ஒவ்வொரு மாணவர்களின் வங்கிக் கணக்கிலும் வரவு வைக்கப்படுகிறது.

மாணவர்கள் அறிவாலும், புத்திசாலியாக வளர வேண்டும். பெற்றோர் தாங்கள் படிக்காத கல்வியை தன் பிள்ளைகள் படிக்க வேண்டும் என்பதற்காக எத்தனையோ தியாகங்களையும் செய்கிறார்கள். மாணவர்கள் பெரியவர்களுக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். பாட புத்தகத்தை முதல் பக்கம் முதல் கடைசி பக்கம் வரை படிக்க வேண்டும். அப்படி படிப்பதன் மூலம் அறிவு திறன் வளரும். படிக்கும்போதே அது மனப்பாடமாக அமையும். மாணவர்கள் ஆசிரியர்கள், பெற்றோர் கூறும் அறிவுரைகளை ஏற்றுக்கொண்டு அவர்களது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் படிக்க வேண்டும் என்றார். 

விழாவில், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், வட்ட பிரதிநிதி பாஸ்கர் மற்றும் அல்பர்ட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பள்ளித் தலைமையாசிரியர் கான்ஸ்டன்டைன் நன்றி கூறினார்.

No comments

Copying is disabled on this page!