கூவனூரில் உயர்மட்ட மேம்பால பணியை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு....
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, திருக்கோவிலூர் ஒன்றியம், கூவனூர் ஊராட்சி அருகே
தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே புதியதாக கட்டப்பட்ட வரும் உயர்மட்ட பாலம் அமைக்கும் கட்டுமானப் பணிகளை பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ. வேலு அவர்கள் இன்று காலை ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்க உரிய ஆலோசனைகளை வழங்கினார். மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று ஆய்வுப் பணிகளில் ஈடுபட உள்ளார்.
இந்த ஆய்வின்போது ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன், சங்கராபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நெடுஞ்சாலை துறையின் அரசு உயர் அதிகாரிகள்,அலுவலர்கள், ஒன்றிய பெரும் தலைவர்கள், துணைத் தலைவர்கள்,ஒன்றிய கழகச் செயலாளர்கள், மற்றும் கழக நிர்வாகிகள் என அனைவரும் உடன் இருந்தனர்.
No comments