மயிலாடுதுறை பல்லவராயன் பேட்டை சீனிவாச பெருமாள் ஆலய பிரம்மோற்சவம், வெண்ணைத்தாழி அலங்காரத்தில் பெருமாள் வீதி உலா, வெண்ணையை வீசி எறிந்து பக்தர்கள் வழிபாடு :-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த பல்லவராயன் பேட்டையில் தென் திருப்பதி வெங்கடாஜலபதி ஆலயம் எனப்படும் சீனிவாச பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது ஆலயத்தின் ஆண்டு பிரம்மோற்சவம் கடந்த நான்காம் தேதி துவங்கிய நடைபெற்று வருகிறது விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று பெருமாள் வெண்ணைத்தாழி அலங்காரத்தில் பல்லக்கில் வீதி உலாவாக எழுந்தருளினார். வீடுகள் தோறும் தீபாராதனை எடுத்து பக்தர்கள் வழிபாடு செய்தனர். தொடர்ந்து பெருமாள் மீதும் பக்தர்கள் ஒருவர் ஒருவர் மீதும் வெண்ணையை வீசி எறிந்து வழிபாட்டில் ஈடுபட்டனர்.
No comments