Breaking News

ஈரோட்டில் ஏஐடியுசி கைத்தறி நெசவாளர் சங்கம் சார்பில் நெசவாளர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம்.


ஈரோட்டில் தீபாவளிக்கு இன்னும் 12 நாட்களே உள்ள நிலையில் கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்க நெசவாளர்களுக்கு உடனடியாக போனஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஓராண்டு காலத்திற்கு மேலான தள்ளுபடி (Rebate) மானியத் தொகைகளை நிபந்தனை இன்றி உடனடியாக வழங்க வேண்டும், நெசவுக்கூலியை வங்கி மூலம் வழங்குவதை கைவிட்டு ரொக்கமாக வழங்க வேண்டும், தள்ளுபடி மானியத் தொகைக்கான உச்ச வரம்புகளை நீக்க வேண்டும், நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு ஜனநாயக முறைப்படி உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும், கடந்த 30 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் உள்ள நெசவாளர்களின் அடிப்படை ஊதியத்தை திருத்தி அமைக்க வேண்டும், 60 வயது நிறைவடைந்த நெசவாளர்களுக்கு மாதாந்திர ஓய்வூதிய தொகையை ரூ1200/ - லிருந்து ரூ.3000/- ஆக உயர்த்தி வழங்க வேண்டும், கைத்தறி ரக ஒதுக்கீட்டு சட்டத்தை கறாராக அமலாக்க வேண்டும், கைத்தறி ரகங்களுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும், நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், நெசவாளர்களுக்கான‌ மருத்துவ காப்பீடு திட்டத்தை ஏற்கனவே இருந்தது போல மாற்றியமைத்து செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியுசி ஈரோடு மாவட்ட கைத்தறி நெசவுத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் இன்று ((18-10-2024) ஈரோடு கைத்தறி உதவி இயக்குநர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் வ.சித்தையன் தலைமை தாங்கினார். ஏஐடியுசி மாநிலச் செயலாளர் எஸ்.சின்னசாமி, ஏஐடியுசி கைத்தறி நெசவுத் தொழிலாளர் சம்மேளன மாநில செயலாளர் மு.வரதராஜன், சங்க மாவட்டப் பொருளாளர் எஸ்.பொன்னுசாமி, துணைத் தலைவர் பி.எம்.கந்தசாமி, துணைச் செயலாளர் வீ.சண்முகம் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள், நிர்வாகக்குழு உறுப்பினர்கள், நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் தலைவர்கள் உள்ளிட்ட மாவட்ட முழுவதும் இருந்து 500-க்கும் மேற்பட்ட ஆண், பெண் நெசவாளர்கள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் நிறைவில், கைத்தறி உதவி இயக்குநர் திரு.செ.சிவக்குமார் அவர்களிடம் சங்கத்தின் சார்பில் கோரிக்கை மனு சமர்பிக்கப்பட்டது. நெசவுத் தொழில் மற்றும் நெசவாளர் நலனைப் பாதுகாத்திட அவற்றை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் அவரிடம் வலியுறுத்தப்பட்டது.

கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட உதவி இயக்குநர் விரைவில் நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் மேலாளர்கள் மற்றும் அலுவலர்களின் கூட்டத்தை நடத்தி‌‌ உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். மேலும் கோரிக்கை மனுவை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைப்பதாகவும் தெரிவித்தார்.

No comments

Copying is disabled on this page!