தியாகதுருகம் அ.ஆ.மே. பள்ளியில் விலையில்லா சைக்கிகளை எம்எல்ஏ வழங்கினார்.....
கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தியாகதுருகம் பேரூராட்சியில் அமைந்துள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு, விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் விலையில்லா மிதிவண்டிகளை மாணவர்களுக்கு வழங்கி, திராவிட மாடல் அரசின் பள்ளிக்கல்வித்துறைக்கான சிறப்புத் திட்டங்களை எடுத்துரைத்தார்.
இந்த நிகழ்வில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், ஒன்றிய கழக செயலாளர்கள், மாவட்ட,ஒன்றிய, பேரூர் பெரும் தலைவர்கள், துணைத் தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மாநில மாவட்ட ,ஒன்றிய, கழக நிர்வாகிகள், பள்ளிக் கல்வித் துறையைச் சேர்ந்த அதிகாரிகள், அலுவலர்கள், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைவரும் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
No comments