மாணிக்கபங்கு ஊராட்சியில் கிராம சபா கூட்டம் தூய்மை பணியாளர்களுக்கு கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் ஒன்றியம் மாணிக்கபங்கு ஊராட்சி ஆணை கோவிலில் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் காந்தி ஜெயந்தி ஒட்டி கிராம சபா கூட்டம் நடைபெற்றது ஊராட்சி மன்ற தலைவர் எஸ். மோகன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது ஊராட்சி செயலர் பொன்.மணிகண்டன் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி பணியாளர்கள் பொதுமக்கள் பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்றனர் இதில் தடையின்றி குடிநீர் வழங்கிட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது ஊராட்சியில் வடிகால் வாய்க்கால்கள் முழுமையாக தூர்வார வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் போடப்பட்டது மேலும் கூட்டத்தில் மாணிக்கபங்கு ஊராட்சி தூய்மை பணியாளர்களுக்கு கேடயங்கள் வழங்கி சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டது மேலும் ஆணைக்கோவில் வழியாக பொதுமக்கள் மாணவர்கள் பயன்பெறும் வகையில் அரசு பேருந்து போக்குவரத்து இயக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
No comments