திருடுவதற்கு பொருள்கள் இல்லையா?; திருநெல்வேலி மாவட்டம் முனஞ்சிப்பட்டி அருகே தபால் பெட்டி திருட்டு.
திருநெல்வேலி மாவட்டம் முனஞ்சிப்பட்டி அருகே கீழகழுவூர் கிராமத்தில் ஒரு வீட்டின் முன்பு தபால் பெட்டி அமைந்துள்ளது. வழக்கம்போல தபால் பெட்டியில் திருமலாபுரம் கிளை அஞ்சலக அதிகாரி மாரி தேவி 23 தபால்களை தொடர்ந்து சேகரித்து வந்தார். நேற்று வழக்கம்போல் தபால்களை சேகரிக்க சென்றபோது தபால் பெட்டி அந்த இடத்தில் இல்லாததால் அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் விசாரித்ததில் தபால் பெட்டியை மர்ம நபர் யாரோ திருடி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து அவர் வடக்கு விஜயநாராயணம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வடக்கு விஜயநாராயண உதவி ஆய்வாளர் உதய லட்சுமி வழக்கு பதிவு செய்து தபால் பெட்டியை திருடி சென்ற மர்ம நபரையும் தபால் பெட்டியையும் தேடி வருகின்றனர்.
பொது மக்களின் அன்றாட உபயோகத்தில் மிகப்பெரிய பங்கு வகிக்கும் தபால் பெட்டியில் எத்தனையோ கடிதங்கள் முக்கியமான ஆவணங்கள் அனுப்பப்பட்டிருக்கலாம். அத்தகைய ஆவணங்களுடன் கூடிய தபால் பெட்டியை மர்ம நபர் யாரோ திருடிசென்றிருப்பது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments