Breaking News

திருவைகுண்டம் தாமிரபரணி மருதூர் அணைக்கட்டினை எம்.சி.சண்முகையா எம்எல்ஏ நேரில் ஆய்வு.


தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவைகுண்டம் தாமிரபரணி ஆற்றுப்படுகையில் உள்ள மருதூர் அணைக்கட்டினை எம்.சி.சண்முகையா எம்.எல்.ஏ., நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, சென்னல்பட்டி கிராமத்தில் மருதூர் மேலக்கால் உபரி நீர் செல்லும் வழித்தடம் மற்றும் பாலத்தினை பார்வையிட்டார் ஆய்வு செய்தார். 

அப்போது, தங்கள் கிராமத்திற்கு சாலை வசதி செய்துதர கீழ புத்தனேரி கல்லடியூர்  கிராம மக்கள் எம்.சி.சண்முகையா எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர். நிகழ்ச்சியில், கருங்குளம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் ராமசாமி, ஒன்றிய துணை செயலாளர் வீரபாகு, மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் சஞ்சய், ஊராட்சி மன்ற தலைவர் பொன்ராஜ், கிளைச் செயலாளர்கள் சுந்தர், அருணாச்சலம், அய்யாக்குட்டி உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

No comments

Copying is disabled on this page!