புதியம்புத்தூர், சாமிநத்தம் ஊராட்சி பகுதிகளில் பேவர் பிளாக் சாலை, சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளை எம்.சி.சண்முகையா அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி, ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட புதியம்புத்தூர், சாமிநத்தம் ஊராட்சி பகுதியில் பேவர் பிளாக் சாலை, சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவில் ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா பங்கேற்று நடுவக்குறிச்சி சுடலை மாடசாமி கோவில் எதிர் தெருவில் ரூ.6 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி, செக்கடிகிணறு தெருவில் ரூ.3 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, நடுவக்குறிச்சி ஓடை தெருவில் ரூ.2 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகளை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிகளில், தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தூர்மணி, ஒன்றிய துணைச் செயலாளர் சிவன், மாவட்ட பிரதிநிதி ஜோசப் மோகன், ஒன்றிய கவுன்சிலர் நவநீதகிருஷ்ணன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் முத்துக்குமார், மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் ஞானதுரை, மாவட்ட மருத்துவர் அணி துணை அமைப்பாளர் தங்கவேல்சாமி, மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் மாடசாமி, ஒன்றிய வர்த்தக அணி துணை அமைப்பாளர் காளியப்பன், ஊராட்சிமன்ற தலைவர்கள் மகாலட்சுமி நல்லதம்பி, அருண்குமார், கிளை செயலாளர் பாலமுருகன், லிங்கராஜ், பூவலிங்கம், சற்குணம், பாண்டியன், சிவமுருகன், மாரியப்பன், சுப்பையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- செ.அந்தோணி இன்பராஜ், தூத்துக்குடி மாவட்ட நிருபர்
No comments