ஒட்டப்பிடாரம் அருகே சாமிநத்தத்தில் புதிய மின்மாற்றி: எம்.சி.சண்முகையா எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி, ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சாமிநத்தம் கிராமத்தில் குறைந்த மின்னழுத்தம் காரணமாக அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனையடுத்து சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா நடவடிக்கையின் பேரில் தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் மின் பகிர்மான கழகத்தின் மூலம் ரூ. 5.89 லட்சம் மதிப்பீட்டில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து புதிய மின்மாற்றியை மக்கள் பயன்பாட்டிற்காக துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா கலந்து கொண்டு புதிய மின் மாற்றியை ரிப்பன் வெட்டி மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், உதவி பொறியாளர் சண்முகத்தாய், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தூர்மணி, ஒன்றிய துணைச் செயலாளர் சிவன், மாவட்ட பிரதிநிதி ஜோசப் மோகன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் முத்துக்குமார், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் மாடசாமி, ஒன்றிய வர்த்தக அணி துணை அமைப்பாளர் காளியப்பன், ஊராட்சி மன்ற தலைவர்கள் மகாலட்சுமி நல்லதம்பி, அருண்குமார், கிளை செயலாளர் பாலமுருகன், சிவமுருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- செ.அந்தோணி இன்பராஜ், தூத்துக்குடி மாவட்ட நிருபர்
No comments