வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: குலையன்கரிசல் பெட்டைக்குளத்தை எம்.சி.சண்முகையா எம்எல்ஏ நேரில் ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த கனமழையால் மாவட்டம் முழுவதும் பெரும்பாதிப்புக்குள்ளானது. கண்மாய் மற்றும் குளங்களில் உடைப்பு ஏற்பட்டு கிராமங்கள் மற்றும் தூத்துக்குடி மாநகருக்குள் வெள்ளநீர் புகுந்து பல்வேறு சேதங்களை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து கடந்த இரு தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் கடந்தமுறை கனமழையினால் சேதமடைந்து மறுசீரமைக்கப்பட்ட கண்மாய், குளங்கள், நீர் வழித்தடங்கள் போன்றவற்றை ஆய்வு செய்து வருகின்றனர்.
அதன்படி, ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குலையன்கரிசல் கிராமத்தில் உள்ள பெட்டைகுளத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் கோரம்பள்ளம், காலாங்கரை பகுதிகளுக்கும் சென்று குளத்தின் கரைகள் மற்றும் மதகுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது, தூத்துக்குடி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் ஜெயக்கொடி, ஒன்றிய பொருளாளர் ரமேஷ், வழக்கறிஞர் அணி மகேந்திரன், தொழிலாளர் அணி அமைப்பாளர் மொபட்ராஜன், கிளைச் செயலாளர் மங்களராஜ், விவசாய சங்க பிரதிதிகள் ரமேஷ், தனம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
No comments