Breaking News

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவின் சிகர நிகழச்சியான சூரசம்ஹார நிகழ்ச்சி. 12 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்பு.


தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றதாகும்.


இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் பத்து நாட்கள் தசரா பண்டிகை வெகு விமர்சையாக நடைபெறுகிறது. தமிழகம் முழுவதிலும் இருந்து மட்டுமல்லாமல் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனுக்காக காப்பு கட்டி முத்தாரம்மனை வேண்டி மாலை அணிவித்து விரதம் இருந்து பல்வேறு வேடங்களை அணிந்து கோவிலுக்கு வந்து அம்மனை வழிபட்டனர்.

இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா கடந்த கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 10 நாட்களாக தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

தசரா விழாவையொட்டி தங்கள் நேர்த்திகடனை செலுத்தும் விதமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் காளி, அனுமன், கிருஷ்ணர், ராமர் மற்றும் குரங்கு, கரடி, சிங்கம், காளி, பிச்சைக்காரன், விலங்குகள் உட்பட பல்வேறு வேடங்களை அணிந்த பக்தர்கள் ஒவ்வொரு ஊரிலும் தசரா குழு அமைத்து தாரை தப்பட்டை மேளம் முழங்க பொதுமக்களிடம் பிச்சையாக எடுத்த காணிக்கையை அம்மன் உண்டியலில் போட்டு முத்தாரம்மனை வணங்கி வழிப்பட்டனர்.

10ம் திருவிழாவான இரவு 12 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவரர் கோவிலுக்கு முன்பாக எழுந்தருளினார். இதையடுத்து கடற்கரை நோக்கி ஊர்வலமாக பக்தர்கள் கூட்டத்தில் வந்தார்.

அதை தொடர்ந்து கடற்கரை மைதானத்தில் மகிஷாசூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சியானது கோலாகலமாக நடந்தது. அப்போது ஏராளமான வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் நடந்தது.

முதலில் தன்முகமாக வந்த மகிஷாசூரனை வதம் செய்த முத்தாரம்மன் அடுத்ததாக யானை முகத்துடனும் எருது முகத்துடனும் வந்த சூரனை வதம் செய்தார். அடுத்து சேவல் உருவில் வந்த மகிஷாசூரனையும் வதம் செய்தார். இந்த சூரசம்ஹார நிகழ்ச்சியில் பத்து லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த சூரசம்ஹார நிகழ்ச்சியே பெரிய அளவிலான திரையில் பக்தர்கள் கண்டு வணங்கினர். இந்த விழாவில் 12 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்காக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

முன்னதாக திருவிழாவுக்கு 4000 போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 50க்கும் மேற்பட்ட இடங்களில் 250 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு முக்கியமான பகுதிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மேலும் 3 தற்காலிக பேருந்து நிலையங்கள், 28 இடங்களில் கார், பைக் வாகன நிறுத்துமிடங்கள், கோவில் கடற்கரை பக்தர்கள் வந்து செல்லக்கூடிய இடங்கள் உட்பட 12 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

10 இடங்களில் காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள், தசரா குழுக்கள் செல்ல தனி பாதை அமைக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை தவிர்க்க 5 இடங்களில் தடுப்புகள் அமைத்து அதில் தசரா குழுக்கள் நிறுத்தி வைக்கப்பட்டு நெரிசல் ஏற்படாமல் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 24 மணி நேரம் செயல்படும் வகையில் மருத்துவ குழுக்கள் 108 ஆம்புலன்ஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.

பக்தர்கள் எளிதாக வந்து செல்ல சுமார் 200 சிறப்பு பேருந்துகள் அனைத்து வழித்தடங்களுக்கும் இயக்கப்பட்டுள்ளது. மேலும் குடிநீர் கழிப்பிடம் உட்பட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

- திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர் பெ.முகேஷ் செல் : 7339011001

No comments

Copying is disabled on this page!