கோவில்பட்டி சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோவில் பகுதியில் மலைக்குன்றுகளை தகர்த்து சரள் எடுத்த விவகாரம் - ஆய்வு நடத்தி அறிக்கை தர தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவு.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள சொர்ணமலை கதிர்வேல் முருகன் திருக்கோவில் பகுதியில் ஆக்கிரமிப்புக்கள் அதிகரித்து வருவது மட்டுமின்றி, அங்குள்ள மலைக் குன்றுகளை தகர்த்து சரள் மண் , கற்கள் எடுக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது, இந்த நிலையில் தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கு பதிந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.
தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்திய கோபால் ஆகியோர் விசாரணை நடத்தியதில் மலைக்குன்றுகள் அகற்றப்பட்டு சரள் மண் எடுத்தது தொடர்பாக தமிழக சுற்றுச்சூழல், வருவாய்த் துறை செயலாளர்கள், புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குனர், ஹிந்து சமய அறநிலைத்துறை ஆணையர், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர், இது தொடர்பான வழக்கு நவம்பர் நான்காம் தேதி நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments