குளத்தின் கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்தப்பட்ட தரமில்லாத கற்கள். ஆய்வுக்கு அனுப்ப எடுத்துச் சென்ற கனிமொழி.
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் நடந்து வரும் சீரமைப்பு பணிகளை இன்று தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அவர் ஸ்ரீவைகுண்டம் கஸ்பா குளத்தில் கரைகள் சீரமைக்கும் பணிகளை ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது, கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்தப்பட்ட கற்கள் தரமற்று இருப்பதை கண்டறிந்த கனிமொழி, கற்களின் தரத்தை உறுதி செய்ய உத்தரவிட்டார்.
இந்த நிலையில், மக்கள் நலத்திட்டங்களுக்கு தரமற்ற கற்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது குறித்து ஒப்பந்ததாரரிடம் கேள்வி எழுப்பியதோடு, அவரை கண்டிக்கவும் செய்தார். மேலும், கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்தப்படும் சில கற்களை ஆய்வுக்கு உட்படுத்தும் நோக்கில் தூத்துக்குடி நாடாளுமன்ற அலுவலகத்திற்குக் கனிமொழி எடுத்து சென்றுள்ளார்.
- திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர் பெ.முகேஷ் செல்: 7339011001
No comments