திருச்செந்தூர் பகுதியில் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கு கனிமொழி கருணாநிதி நன்றி தெரிவித்தார்.
திருச்செந்தூர் காமராஜர் சிலை பகுதியில் நின்று திறந்த வேனில் பொதுமக்களிடம் பேசுகையில், சென்ற தேர்தலிலே நம்முடைய முதலமைச்சர் இரண்டாவது முறையாக தூத்துக்குடியில் உங்களுடைய மக்கள் பிரதிநிதியாக பணியாற்றுவதற்கு எனக்கு வாய்ப்பை தந்தார்கள். அதேபோல இரண்டாவது முறையாக தேர்தலிலே மிகப்பெரிய ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறக்கூடிய வாய்ப்பை நீங்கள் எனக்கு அளித்துள்ளீர்கள். உங்கள் அத்தனை பேருக்கும் என்னுடைய நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
தொடர்ந்து இந்த தொகுதியில் இருக்கக்கூடிய மக்களுக்கான பணிகளை உங்களை கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான அத்தனை முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொள்வேன் என்ற உறுதியை உங்கள் அனைவருக்கும் நான் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல இந்த பகுதியை ஏற்கக்கூடிய மக்களுக்கான வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதற்கு இங்கே அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு என்னால் ஆன அத்தனை முயற்சிகளையும் செய்து அவற்றையெல்லாம் நிறைவேற்றுவேன் நம்முடைய முதலமைச்சர் வழியிலே நின்று உங்களோடு பணியாற்றுவேன். மத்திய அரசு 100 நாள் வேலை பணத்தை வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறது என்ற குற்றச்சாட்டையும் அவர் முன் வைத்தார்.
அதைத் தொடர்ந்து அமலிநகரில் கனிமொழி கருணாநிதிக்கு அப்பகுதி மக்கள் வரவேற்பு அளித்தனர். அதன்பின்னர் அங்கிருந்தவர்கள் தாங்களும் திருச்செந்தூர் கோவில் கடற்கரை பகுதியில் கடைகள் அமைப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார்.
- திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர் பெ.முகேஷ் செல்: 7339011001
No comments