பசு பாதுகாப்பை வலியுறுத்தி பயணம் வந்த, ஜகத்குரு சங்கராச்சார்ய சுவாமி அவிமுக்தேஸ்வரானந்தா சரஸ்வதி சுவாமிகள் கோ - பூஜை செய்தார்.
பசு பாதுகாப்பை முன்னிறுத்தி, ஜகத்குரு சங்கராச்சார்ய சுவாமி அவிமுக்தேஸ்வரானந்தா சரஸ்வதி சுவாமிகள் நாடு முழுதும், பயணம் மேற்கொண்டு, விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
புதுச்சேரிக்கு நேற்று வந்த அவருக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து வாழைக்குளம்செங்கழுநீர் அம்மன் கோவிலில், நேற்று மதியம் 12:00 மணியளவில் நடந்த கோ பூஜை நிகழ்ச்சியில், பங்கேற்று பூஜை செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
தொடர்ந்து அவர், பேசுகையில், 'இந்த பயணமானது, அயோத்தியில் இருந்து துவங்கி இருக்கிறேன். பசுவை பாதுகாக்க, பசுவை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். பசுவை கொல்வதோ, அதை வியாபார நோக்கத்துடனோ பார்க்கக் கூடாது.சனாதன தர்மத்திற்கு பல விதமான நுால்கள் இருக்கிறது. அதில் முக்கியமானது பசு வழிபாடு, அதை நாம் பாதுகாக்க வேண்டும்' என்றார்.
No comments