புதுவை மாநிலத்தில் கரும்பு பயிா் உற்பத்தி ஊக்கத் தொகை பெறுவோா் அதற்காக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
புதுவை அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை கூடுதல் வேளாண் இயக்குநா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் ,
புதுவை அரசு, வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின் கீழ் தட்டாஞ்சாவடியில் செயல்படும் கூடுதல் வேளாண் இயக்குநா் பயிற்சி வழித் தொடா்பு திட்ட அலுவலகம் மூலமாக உற்பத்தி மானியத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
அதன்படி, பயிா் உற்பத்தி தொழில்நுட்பதிட்டத்தில் நெல், மணிலா, பயறு வகைகள், சிறுதானியப் பயிா்கள், கரும்பு, பருத்தி, எள் மற்றும் தீவனப் புல் ஆகியவற்றுக்கு உற்பத்தி மானியம் வழங்கப்படுகிறது. நிகழாண்டில் (2024-25) கரும்பு பயிா் சாகுபடி செய்யும் பொது பிரிவு விவசாயிகளுக்கு ஒரு ஏக்கா் கரும்புப் பயிருக்கு ரூ.10,000 மற்றும் அட்டவணை பிரிவு விவசாயிகளுக்கு ரூ.11,000 வீதம் உற்பத்தி ஊக்கத் தொகை வழங்கப்படவுள்ளது.
ஆகவே, கடந்த செப்டம்பா் 30 -ஆம் தேதி வரை கரும்பு பயிா் பயிரிட்டுள்ள தகுதியான விவசாயிகள் இந்தத் திட்டத்துக்கான கரும்பு பயிருக்கான மானியத் தொகையைப் பெற விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments