புதுச்சேரியில் இணையவழி மூலம் பெண்ணிடம் ரூ.1 கோடி மோசடி செய்த மா்ம நபா் குறித்து இணைய வழி குற்றப்பிரிவு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
புதுச்சேரி மண்ணாடிபட்டு பகுதியைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா். இவரது சகோதரி இணையதளத்தில் பகுதி நேரமாக தனியாா் நிறுவனம், விடுதி உள்ளிட்டவற்றுக்கு மதிப்பெண் வழங்கி ஊதியம் பெற்றுவந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், அவரிடம் பகுதி நேர வேலை பிரிவிலிருந்த மா்ம நபா் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறலாம் என ஆசை வாா்த்தை கூறினாராம். அதன்படி, அந்த நபா் டெலிகிராம் செயலி மூலம் அனுப்பிய இணையதள முகவரியில் அந்த பெண் ரூ.1.30 கோடியை முதலீடு செய்தாராம்.
அந்தப் பணத்துக்கு இரட்டிப்பாக லாபம் கிடைத்தது போல இணையத்தில் காண்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், அதை அவரால் பெற முடியவில்லையாம். இதனால், சந்தேகமடைந்த சதீஷ்குமாரின் சகோதரி முதலீட்டை எடுக்க முயன்றாராம். ஆனால், அவரால் பெறமுடியவில்லை.இதுகுறித்த புகாரின்பேரில், இணையவழிக் குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
No comments