சர்வதேச பெண் குழந்தைகள் தினம்: தூத்துக்குடியில் வாகன பிரச்சாரத்தை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடியில் சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு வாகனப் பிரச்சாரத்தை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார். சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ரோட்டரி ட்ரெயில் பிளேசர்ஸ் அமைப்பு சார்பில் பெண் குழந்தைகளைக் காப்போம் எனும் விழிப்புணர்வு வாகனப் பிரச்சாரத்தை தூத்துக்குடியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், மாநகர திமுக செயலாளர் ஆனந்த்சேகரன், பகுதிச் செயலாளர் ரவீந்திரன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலெக்ஸ், டாக்டர். ப்ளோரா, வழக்கறிஞர் சுவர்ணலதா, மகளிர் அதிகார மைய மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் நிவேதிதா, நிதி கல்வியறிவு வல்லுநர் ஜெயலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments