முத்தியால்பேட்டை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்ஸ்பெக்டர் தனசேகர் தலைமையிலான போலீசார் திடீரென சோதனை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரியில் குற்ற சம்பவங்களை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் முத்தியால்பேட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தனசேகர், சப் இன்ஸ்பெக்டர் சிவ பிரகாசம் தலைமையிலான போலீசார் வைத்திகுப்பம்,கருசுக்குப்பம்,வாழைக்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திடீர் ரோந்து சென்றனர். அப்போது பொது மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் பொது இடங்களில் கும்பலாக நின்றவர்கள், குற்றப் பின்னணி கொண்ட அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
மேலும் பள்ளி,கல்லூரி முடிந்து வீட்டுக்கு வரும் மாணவிகளை பின் தொடர்ந்து தொல்லை கொடுத்தால் தைரியமாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமென மாணவிகளிடம் இன்ஸ்பெக்டர் தனசேகர் நம்பிக்கையூட்டினார். முத்தியால்பேட்டை போலீசாரின் திடீர் சோதனையால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
No comments