சட்டமன்ற உறுதிமொழி குழு தலைவர் பதவியில் இருந்து சுயேட்சை எம்எல்ஏ நேருவை நீக்கிய சபாநாயகர் செல்வத்தை கண்டித்து பொதுநல அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்..
புதுச்சேரியில் கடந்த வாரம் ரவுடிகளால் தாக்கப்பட்ட வியாபாரிக்கு சரியான சிகிச்சை அளிக்கவில்லை எனக்கூறி சுயேட்சை எம்எல்ஏ நேரு தலைமையில் பொதுநல அமைப்பினர் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக முதல்வர் ரங்கசாமி முன்னிலையில் சபாநாயகரும், சுயேச்சை எம்எல்ஏ நேருவும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், சட்டமன்ற உறுதிமொழி குழு தலைவர் பதவியிலிருந்து நேருவை நீக்கி செல்வம் சபாநாயகர் உத்தரவிட்டார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சட்டமன்ற உறுதிமொழி குழு தலைவர் பதவியில் இருந்து நேரு எம்எல்ஏவை நீக்கிய சபாநாயகர் செல்வத்திற்கு கண்டனம் தெரிவித்ததுடன், அவரை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பொது நல அமைப்பினர் அறிவித்திருந்தனர்.
அதன்படி, அண்ணா சிலை அருகே பொதுநல அமைப்பினர், சபாநாயகர் செல்வத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.
இது திராவிட விடுதலைக் கழகம் லோகு ஐயப்பன், தமிழ் மீனவர் விடுதலை வேங்கைகள் மங்கையர் செல்வம், மக்கள் வாழ்வுரிமை இயக்கம் ஜெகநாதன், தமிழர் தேசிய முன்னணி தமிழ்மணி, மக்கள் உரிமை கூட்டமைப்பு சுகுமாரன், தமிழர் களம் அழகர், மாணவர் கூட்டமைப்பு சுவாமிநாதன் உட்பட 300-க்கும் மேற்பட்ட பொதுநல அமைப்பினர் கலந்து கொண்டு சபாநாயகர் செல்வத்தை கண்டித்து கன்னட கோஷங்களை எழுப்பினர்.
No comments