சிஎஸ்ஐ தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல புதிய அலுவலக கட்டிட திறப்பு விழா; திருமண்டல லே செயலர் கிப்ட்சன் திறந்து வைத்தார்.
ஆனால் இன்று வரை வழக்கிற்காக நீதிமன்றத்திற்கு அலைந்து வருகிறோம். நாங்கள் நிம்மதியாக இருந்து நிர்வாகம் செய்யவிடாமல் தொடர்ந்து புதுப்புது வழக்குகளை போட்டு எங்களை முடக்க நினைத்தாலும் அனைவரும் ஒன்றிணைந்து பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் திருமண்டல அலுவலகத்தை கட்டி இன்று திறந்து வைத்துள்ளோம். கடந்த 2017ம் ஆண்டு முந்தைய நிர்வாகத்தினர் நியமித்த ஆசிரியர்களுக்கு ஊதியம் இல்லாமல் இருந்து வந்தனர். நாங்கள் வந்த பிறகு பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் பிரச்சினைகளை சரி செய்து புதிய ஆசிரியர்களை நியமித்து அனைவருக்கும் ஊதியம் பெற்றுக் கொடுத்துள்ளோம்.
இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன் உள்ளிட்டோரை தொடர்ந்து சந்தித்து இதனை சாத்தியமாக்கியுள்ளோம். குருமார்களுக்கு ஊதிய உயர்வு உள்ளிட்டவைகளை வழங்கி அவர்கள் நலனையும் பாதுகாத்தோம். பலரின் தியாகம் மற்றும் தரிசனத்தோடு உருவாக்கிய இந்த திருமண்டலத்தையும், திருச்சபையையும் மேம்படுத்துவதற்கான பணிகளை தொடர்ந்து செய்வோம் என்றார். விழாவில் பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
நிகழ்ச்சியில், திருமண்டல உப தலைவர் தமிழ்செல்வன், குருத்துவ செயலர் இம்மானுவேல் வான்ஸ்றக், பொருளாளர் டேவிட்ராஜ், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் மேலாளரும், தமிழ்நாடு அரசு சிறுப்பான்மையினர் நலவாரிய உறுப்பினருமான பிரேம்குமார் ராஜாசிங், தொடக்க பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகள் மேலாளர் ஜேஸ்பர் அற்புதராஜ், ஜி.எம்.எஸ். பொதுச்செயலாளர் இஸ்ரேல் ராஜதுரைசிங், பொருளாளர் ஜெபதிலகர், ஐ.எம்.எஸ். தலைவர் ஈஸ்டர் பாக்கியநாதன், பொதுச்செயலாளர் இம்மானுவேல் பொன்னுதுரை, கல்லூரி தாளாளர்கள் ராஜேஷ் ரவிசந்தர், ஜெயக்குமார் ரூபன், எபனேசர் மங்கல்ராஜ், கிறிஸ்டோபேல், சாலமோன் பொன்ராஜ், காந்திராஜன், கமலி ஜெயசீலன், செல்வின், பள்ளித் தாளாளர்கள் ஸ்டேன்லி வேதமாணிக்கம், செந்தூர் மணி, ஜெயரட்சகர், இன்ஸ்டீன், டேவிட் வேதராஜ் மற்றும் சபைமன்றத் தலைவர்கள், குருவானவர்கள், உதவி குருவானவர்கள், தலைமை ஆசிரியர்கள், பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments