பாளையங்கோட்டையில் 'உழவும் உயிரும்' பார்ம் கேர் சொலுஷன்ஸ் திறப்பு விழா: சபாநாயகர் அப்பாவு, மற்றும் மேயர் ராமகிருஷ்ணன் பங்கேற்பு.
'உழவும் உயிரும்' பார்ம் கேர் சொலுஷன்ஸ் கடையின் உரிமையாளர்கள் எலிசா கிளாட்சன், ஏஞ்சலின் கிளாடினா ஆகியோர் வரவேற்றனர். திருநெல்வேலி மாநகராட்சி மேயர் ஜி.ராமகிருஷ் ணன் என்ற கிட்டு, துணை மேயர் கே.ஆர்.ராஜு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
"உழவும் உயிரும்" கடையில் விவசாயத்தின் அவசியத்தை போற்றும் வகையில் விவசாயத்திற்குத் தேவை யான அனைத்து பொருட்களும், விவசாயத்தில் ஏற்படும் பிரச்சனைகளைத் தீர்க்கும் அனைத்து வகையான அத்தியாவசியப்பொருட்களும் நியாயமான விலையில் தரமான வகையில் விற்பனை செய்யப்படுகின்றன.
இத்திறப்பு விழாவில் பாளையங்கோட்டை மண்டலத் தலைவர் மா.பிரான்சிஸ், மாமன்ற உறுப்பினர்கள் உலகநாதன், கமாலுதீன், புகாரி ஓட்டல் உரிமையாளர் என்.புகாரி நளீம், அக்னி அபிஷேக ஊழியர் சாமுவேல், ஓய்வு பெற்ற கூடுதல் வேளாண்மை இயக்குனர் முத்து தாஸ், ராஜன் ப்ளூமெட்டல்ஸ் உரிமையாளர் ஜோசப் ஜான் சாமுவேல், தொழிலதிபர் லிங்கம், எஸ்.ஏ. ப்ளூ மெட்டல்ஸ் உரிமையாளர் கலையரசன், சொக்கலிங்கம் குவாரி உரிமை யாளர் ஆறுமுகம் மற்றும் ரமேஷ், மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் எஸ்.முருகன் மற்றும் கே.முருகையா, திருநெல்வேலி இன்ஃபோ சிஸ்டம்ஸ் சுரேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments