அம்பலூர் ஊராட்சியில் ரூ36.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு விழா.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தாலுக்கா நாட்றம்பள்ளி ஒன்றியம் அம்பலூர் ஊராட்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் ரூ36.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய ஆரம்ப சுகாதார நிலையம் திறந்து விழா ஊராட்சி மன்ற தலைவர் ஏ.பி.முருகேசன் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க. தேவராஜ் ரிப்பன் வெட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்கள். உடன் நாட்றம்பள்ளி வட்டார மருத்துவ அலுவலர் செல்லமுத்து ராமநாயக்கன் பேட்டை ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவர் வித்தியா மற்றும் செவிலியர்கள் ஒன்றிய குழு தலைவர் வெண்மதி முனுசாமி நாட்றம்பள்ளி மேற்கு ஒன்றிய செயலாளர் சாமுடி ஒன்றிய குழு துணை தலைவர் தேவராஜ் இளைஞரணி அமைப்பாளர் துணை சிங்காரவேலன் ஒன்றிய குழு உறுப்பினர் சக்திராஜா ஊராட்சி மன்ற துணைத் தலைவர் நர்மதா நந்தகோபால் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments