காரைக்குடி அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள உடற்கூராய்வு கட்டிடம் திறப்பு.
கூட்டுறவுத்துறை அமைச்சர் .கேஆர்.பெரியகருப்பன் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் . ப.சிதம்பரம் ஆகியோர், சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பகுதியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள உடற்கூறாய்வு கட்டிடத்தினை, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தலைமையில், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி முன்னிலையில் பயன்பாட்டிற்கு அர்பணித்து, அப்புதிய கட்டிடத்தினை பார்வையிட்டனர்.
இந்நிகழ்வின் போது, கூட்டுறவுத்துறை அமைச்சர் பேசுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, எண்ணற்ற திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி, இந்தியாவில் முதன்மையான முதலமைச்சராக திகழ்ந்து வருகிறார்கள். மேலும், பொதுமக்களுக்கான நலத்திட்டங்களை வழங்கி வருவது மட்டுமின்றி, பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு, அரசின் பல்வேறு திட்டங்களின் கீழும், மாநிலங்களை உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் மாவட்ட முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில், நமது மாநிலங்களவை உறுப்பினர் சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் பல்வேறு மேம்பாட்டு வசதிகளை மேம்படுத்துவதற்கும், பள்ளிகளில் உள்ள நூலகங்களின் மேம்பாட்டு வசதிக்கும் என கல்வி மற்றும் மருத்துவத்திற்கு முன்னுரிமை அளித்து, மாநிலங்களவை உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் பல்வேறு பணிகளை மேற்கொண்டு, பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் ஆக்கப்பூர்வமாக நிதியினை அளித்து பொதுமக்களை பயன்பெற செய்து வருகிறார்கள்.
அதனடிப்படையில், காரைக்குடி அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் புதிய உடற்கூறாய்வு கட்டிடம் அமைகின்ற வகையில் ரூ.90.00 இலட்சம் மதிப்பீட்டில் நிதியினை ஒதுக்கீடு செய்து, புதிய கட்டிடம் அமைகின்ற வகையில் சிறப்பான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளது பாராட்டுக்குரியதாகும். இதுமட்டுமின்றி, இதேபோன்று சிவகங்கை மாவட்டத்தின் வளர்ச்சிக்கு, இன்னும் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்கும் இந்நிகழ்ச்சியின் வாயிலாக தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என கூட்டுறவுத்துறை அமைச்சர் .கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது, மாநிலங்களவை உறுப்பினர் பேசுகையில், தமிழக முதலமைச்சர் மருத்துவத்துறையில் மகத்தான சேவையை மேற்கொண்டு வருகிறார்கள். அந்தவகையில், இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் மருத்துவத்துறையில் மகத்தான திட்டங்களை அறிவித்து, உயிர்காக்கும் மருத்துவ சேவையினை பொதுமக்களுக்கு வழங்கி, அவர்களின் நலன்காத்து வருகிறார்கள்.
மேலும், தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களில் போன்றவைகளில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டு, பொதுமக்களின் வசதிக்கேற்ப பல்வேறு பிரிவுகளுக்கான கூடுதல் கட்டிடங்களும் கட்டுவதற்கான ஆணையினையும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பிறப்பித்துள்ளார்கள். மேலும், அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மாவட்ட முழுவதும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், மாநிலங்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் ஆக்கபூர்வமான திட்டங்களுக்கென நான் நிதியினை ஒதுக்கீடு செய்து வருகிறேன்.
அதில் இந்த ஆண்டுக்கான மாநிலங்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.5 கோடியில், காரைக்குடி அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் புதிய உடற்கூறாய்வு கட்டிடம் அமைகின்ற வகையில் ரூ.90.00 இலட்சம் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்து, அதற்கான கட்டிடம் தரமான முறையில் கட்டி முடிக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என மாநிலங்களை உறுப்பினர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், இணை இயக்குநர் (பொது மருத்துவம் மற்றும் ஊரக நலம் பணிகள்) பிரியதர்ஷினி, காரைக்குடி மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் அருள்தாஸ், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ராதாபாலசுப்பிரமணியன், ஒன்றிய குழு உறுப்பினர் தேவி மீனாள், சங்கராபுரம் ஊராட்சி மன்றத்தலைவர் தேவி மாங்குடி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
No comments