Breaking News

காரைக்காலில் இந்திரா காந்தி சக்தி அபியான் திட்ட துவக்க விழா.

 


காரைக்கால் மாவட்டம் பூவம் பகுதியில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் இந்திரா காந்தி சக்தி அபியான் திட்ட துவக்க விழா நடைபெற்றது. காரைக்கால் மாவட்ட சக்தி அபியான் திட்ட ஒருங்கிணைப்பாளர் கலைவாணி தலைமையில் தலா ஐந்து பேர் கொண்ட 25 குழுக்கள் உருவாக்கப்பட்டு அவர்களுக்கான பயிற்சி இன்று துவக்கி வைக்கப்பட்டது. கடந்த ஆண்டு   நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் இந்திரா காந்தி சக்தி அபியான் திட்டம் துவங்கப்பட்டது. இந்திரா காந்தி சர்வ சக்தி அபியான் திட்டத்தின் தமிழக ஒருங்கிணைப்பாளர் ஜெயந்தி தியாகராஜன் காரைக்காலில் இந்த திட்டத்தினை துவக்கி வைத்தார். திட்டத் துவக்க விழாவில் புதுச்சேரி மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.வி.சுப்ரமணியன், புதுச்சேரி மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்த்பாபு நடராஜன், காரைக்கால் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரஞ்சித், ஒருங்கிணைப்பாளர் லோகேஷ் குமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

        இளைஞர் காங்கிரஸின் இந்திரா காந்தி சர்வ சக்தி அபியான் திட்டத்தை துவக்கி வைத்த தமிழக திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயந்தி தியாகராஜன் கூறுகையில்: நாடு முழுவதும் அரசியல் மற்றும் அரசு பதவிகளில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் இந்திரா காந்தி சர்வ சக்தி அபியான் எனும் இந்த திட்டத்தின் மூலம் 9 மாத கால பயிற்சி வழங்கப்படுகிறது எனவும் சிறப்பாக பயிற்சி முடித்த பெண்களுக்கு காங்கிரஸில் பதவிகள் வழங்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.அரசு பதவிகள் மட்டுமன்றி அரசியலில் ஆண்களின் பின்புறத்தில் மட்டுமே வந்த பெண்களை தவிர்த்து தனி திறமையுடன் தனித்து தலைவர்களாக பெண்களை உருவாக்க இந்த திட்டத்தை செயல்படுத்தி வருவதாக கூறிய ஜெயந்தி தியாகராஜன் புதுச்சேரியில் வரும் சட்டமன்ற தேர்தலில் 30 சதவீத பெண்கள் போட்டியிட வேண்டிய நிலையில் அதற்கான முன்னோட்டமாகவும் இந்த திட்டத்தினை செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார்.அடுத்த 10 ஆண்டுகளில் இந்த திட்டம் தனி சட்டமாக உருவாக்கும் வகையில் சிறப்பான திட்டமாக உருவாகும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.  

         

    விழாவின் போது செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி முன்னாள் அமைச்சர்.

 ஏ.வி.சுப்ரமணியன் கூறியதாவது: இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்தின் முதல் நாட்டின் அடித்தட்டு மக்கள் மட்டுமன்றி பெண்களின் சுதந்திரத்திற்காகவும் பாடுபட்ட இயக்கம் காங்கிரஸ் எனவும் பெண்கள் முன்னேற்றத்திற்காகவும் பல்வேறு திட்டங்களை காங்கிரஸ் செயல்படுத்தி வந்த நிலையில் தற்போது இளைஞர் காங்கிரஸ் அமைப்பின் சார்பில் சக்தி அபியான் எனும் திட்ட மூலம் பெண்களுக்கு அரசியல் மற்றும் அரசு வேலை வாய்ப்புகளில் அதிக முன்னுரிமை அளிக்கும் வகையில் இந்தத் திட்டத்தினை செயல்படுத்து வருவதாக தெரிவித்தார் நாட்டில் அடித்தட்டு மக்கள் வளர்ச்சி மற்றும் பெண்கள் முன்னேற்றத்திற்காக சிறிதும் அக்கரை கொள்ளாத கட்சி பாஜக எனவும் அவர் குற்றம் சாட்டினார்.

No comments

Copying is disabled on this page!