Breaking News

சீர்காழியில் ஆயுத பூஜையை முன்னிட்டு  சிலம்பாட்ட மாணவர்கள் வீர விளையாட்டு உபகரங்களுக்கு சிறப்பு வழிபாடு.கிராமம் கிராமமாக சென்று மரபு கலையை இலவசமா பயிற்றுவிக்கும் இளைஞரின் முயற்ச்சிக்கு பொதுமக்கள் பாராட்டு.

 



மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை அடுத்த புளிச்சக்காடு கிராமத்தை சேர்ந்தர் இயற்கை விவசாயி இளைஞர் தினேஷ்.இயற்கை விவசாயியான இவர் விவசாயம் செய்வதோடு ஓய்வு நேரங்களில் கிராமம் கிராமமாக சென்று தமிழர் வீரவிளையட்டு மரபு கலைகளை பயிற்றுவித்து வருகிறார்.விடுமுறை நாட்களை பயனுள்ளதாக மாற்றவும் அழிவின் விளிம்பில் உள்ள தமிழர் மரபு கலையை மீட்டெடுக்கும் முயற்சியாக ஏழை எளிய மாணவர்களுக்கு அவர்களின் கிராமத்திற்கே சென்று  தற்காப்பு கலைகளை பயிற்றுவிக்க துவங்கிய தினேஷ் தற்போதும் 10 க்கும் மேற்பட்ட கிராமங்களில் மரபு கலையை இலவசமாக பயிற்றுவித்து வருகிறார். 


இன்று ஆயுத பூஜையை முன்னிட்டு சீர்காழி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஒன்றினைந்த பல்வேறு கிராமங்களை சேர்ந்த சிலம்பக்கலை மாணவ, மாணவிகள் தங்களது வீர விளையாட்டு உபகரணங்களுக்கு படையலிட்டு வழிபாடு செய்தனர். பெஸ்ட் கல்வி நிறுவனங்களின் தாளாளர் எஸ்.எஸ்.என்.ராஜ்கமல் கலந்து கொண்டு வீரவிளையாட்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து 3 வயது சிறுவர்கள் முதல் 20 வயது  மாணவர்கள் வரை நடுகம்பு, நெடுகம்பு, அலங்கார சிலம்பம், இரட்டைகம்பு, குத்துவரிசை,வாள் வீச்சு,  வேல்கம்பு, சுருள் வாள் வீச்சு என பல்வேறு தற்காப்பு கலைகளை வீரவிளையாட்டு நிகழ்ச்சி  நடைபெற்றது. சுற்றியிருந்த பெற்றோர் மற்றும் பொதுமக்கள் மாணவ, மாணவிகளை  கைத்தட்டி உற்ச்சாகபடுத்தினர்.செல்போன் தொலைக்காட்சி என மாறிய இன்றய மாணவர்களிடையே மரபுவழி தற்காப்புக்கலை கற்றுக்கொள்ளும் மாணவர்களுக்கு மன வலிமையையும்,உடல் ஆரோக்கியத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக கூறிய பொதுமக்கள் இளைஞர் தினேஷ்குமாரின் முயற்ச்சியை பாராட்டினர்.

No comments

Copying is disabled on this page!