Breaking News

புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் போலீசார் திடீர் வாகன சாதனையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 


புதுச்சேரியில் இருசக்கர வாகனங்கள் திருடு போகும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். 


இந்த நிலையில் புதுச்சேரி நகரப்பகுதிகளில் பல்வேறு இடங்களில் போலீசார் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் என அனைத்து வாகனங்களையும் சோதனை செய்த போலீசார் உரிய ஆவணங்கள் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்தனர். மேலும் உரிய ஆவணங்கள் இல்லாமல் வந்த வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர். மேலும் மோட்டார் சைக்கிளில் ஓடி வந்த சிறுவர்களை எச்சரித்து அனுப்பினர்.


No comments

Copying is disabled on this page!