புதுச்சேரியில் சாலை கடப்பது போல் சென்று ஓடும் பேருந்தின் பின் சக்கரத்தில் விழுந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட பதபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியில் தொழிற்சாலைகள், கனரக வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளதால் நாள்தோறும் அதிக அளவு வாகனங்கள் மற்றும் பேருந்துகள் செல்கின்றன. இதனால் எப்போதும் போக்குவரத்து நெரிசல் உள்ள சாலையாக இது உள்ளது.
இந்த நிலையில், அந்த சாலையில் இன்று பிற்பகல் ஓடும் பேருந்தின் பின் சக்கரத்தில் விழுந்து வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட பதபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிசிடிவி காட்சியில் வெளியான பதிவில், சாலையின் ஓரமாக நடந்து சென்ற வாலிபர் சாலையை கடப்பது போல நின்றிருந்த நிலையில், வேகமாக வந்த பேருந்து கீழ் சக்கரத்தில் விழுந்து தற்கொலை முயற்சி செய்கிறார். இதில் பேருந்தின் பின்சக்கரம் ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து பதிவாகியுள்ளது.
இது தொடர்பாக போக்குவரத்து போலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நடத்திய விசாரணையில் நாகப்பட்டினம், தர்மானபுரம் பகுதியை சேர்ந்த துப்புரவு தொழிலாளான அரவிந்த்சாமி (30) புதுச்சேரியில் வேலை செய்கிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் என்ன காரணத்திற்காக தற்கொலை செய்துகொண்டார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments