Breaking News

புதுச்சேரியில் கடலில் குளித்த போது ராட்சத அலையில் இழுத்துச் செல்லப்பட்டு 2 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 


புதுச்சேரி மதகடிப்பட்டில் தனியார் பொறியியல் கல்லூரி உள்ளது. இங்கு மூன்றாம் ஆண்டு படிக்கும் 10 மாணவர்கள் சக நண்பரின் பிறந்த நாளை முன்னிட்டு வீராம்பட்டினம் கடற்கரைக்கு நேற்று மதியம் வந்தனர். அப்போது அங்கு அவர்கள் மது அருந்தியதாக கூறப்படுகிறது. 

இதனையடுத்து அவர்கள் கடலில் இறங்கி குளித்த போது,

 திருக்கனூரைச் சோ்ந்த திவாகா் (20), முத்திரப்பாளையம் மோகனதாஸ் (20) ஆகிய இருவர் ராட்சத ஆலையில் சிக்கி கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள் கூச்சலிட்டதை தொடர்ந்து, அப்பகுதி மீனவர்கள் உடனடியாக கடலில் இறங்கி அவர்களை தேடினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கடலோர காவல் பிரிவு போலீசார், தீயணைப்பு வீரர்கள், அரியாங்குப்பம் காவல் நிலைய போலீசார் மற்றும் அப்பகுதி மீனவர்கள் இரவு முழுவதும் தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை. இந்த நிலையில்  அவர்களது சடலம் பழைய துறைமுகம் முகத்துவாரம் அருகே கரை ஒதுங்கியது.

அரியாங்குப்பம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Copying is disabled on this page!