மணலூர்பேட்டையில் தண்ணீர் திறக்கும் தொட்டியில் ஒருவர் விழுந்து மரணம்....
கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை திருக்கோவிலூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் வீராசாமி , வயது 62. த/பெ வேலுக்கவுண்டர்.
இவருக்கு திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளனர்.
இவர் கடைவீதியில் டைலர் வேலை செய்து வருகிறார்.மணலூர்பேட்டை பேரூராட்சியில் பேருந்து நிலையம் அருகே உள்ள கங்கை அம்மன் கோயில் எதிரில் உள்ள வீதிகளுக்கு குடிநீர் வழங்க வாட்டர் டேங்கில் இருந்து தண்ணீர் திறப்பு கேட்வால் தொட்டி உள்ளது. இது சுமார் 2 அடி அகலம் 4 அடி நீளம் அளவு கொண்ட தொட்டியாகும். இதில் வீராசாமி குடிபோதையில் நேற்று இரவு தவறி விழுந்து உள்ளார். மழையின் காரணமாக தொட்டியில் தண்ணீர் இருந்ததால் மூச்சு திணறி உயிரிழந்தார்.
இது குறித்து மணலூர்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருமால் அவர்கள் விசாரணை செய்து வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி திருவண்ணாமலை அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
No comments