காரைக்காலில் 8 ஆண்டுகளுக்கு பிறகு ரேஷன் கடைகள் திறப்பு..
தீபாவளியையொட்டி அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் தலா இரண்டு கிலோ சர்க்கரை, 10 கிலோ அரிசி இலவசமாக அமைச்சர் திருமுருகன் வழங்கினார். ரேஷன் கடை திறப்பு விழாவில் மூன்று வேலையும் குழந்தைகளுடன் சாப்பிடுவோம் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த நரிக்குறவர் பெண்கள்.
நேரடி மானியத் திட்டத்தை கடந்த காங்கிரஸ் ஆட்சியில் முதலமைச்சராக நாராயணசாமி இருந்த போது அரசின் விருப்பத்திற்கு மாறாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அமலுக்கு கொண்டு வந்தார்.இதனால் ரேஷன் கடைகள் மூடப்பட்டன.
இந்த நிலையில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று விரைவில் ரேஷன் கடைகள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் வாக்குறுதி அளித்தார்.
இதன் அடிப்படையில் புதுச்சேரியில் கடந்த 21ஆம் தேதி ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக காரைக்காலில்
8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரேஷன் கடைகளை திறந்து ரேஷன் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
கோவில் பத்து பகுதியில் உள்ள ரேஷன் கடையை திறந்து வைத்து தீபாவளியொட்டி இரண்டு கிலோ சர்க்கரை, 10 கிலோ அரிசி ஆகியவற்றை புதுச்சேரி கொடுமை பொருள் அமைச்சர் திருமுருகன் பயனாளிகளுக்கு வழங்கினார்கள். ரேஷன் கடை திறப்பு விழாவின் போது வருகை தந்த அமைச்சரே அப்பகுதியில் உள்ள நரிக்குறவர் பெண்கள் குழந்தைகளுடன் அவரை வழிமறித்த தீபாவளியை ரேஷன் கடை இல்லாததால் மூன்று வேலையும் சாப்பிட முடியாமல் தவித்து வந்தோம் என்றும் தற்போது ரேஷன் கடை திறப்பால் குழந்தைகளுடன் மூன்று வேளையும் சாப்பிடுவோம் என்று கண்ணீர் மல்க பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கைகூப்பி அமைச்சர் திருமுருகனுக்கு நன்றி தெரிவித்தனர் உடனே அமைச்சர் முதலமைச்சர் ரங்கசாமிக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் என்று கூறி சென்றார் இச்சம்பவத்தால் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இந்த நிகழ்வில் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் துணை இயக்குனர் சச்சிதானந்தம் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் துறை சேர்த்த அதிகாரிகள் பொதுமக்கள் பங்கேற்றனர்.
காரைக்கால் மாவட்டத்தில் மொத்தமுள்ள 59540 ரேஷன் கார்டுகள் உள்ளன. இதில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கும் மஞ்சள் ரேஷன் கார்டுகளும் உள்ள இருபாலருக்கும் தலா இரண்டு கிலோ சர்க்கரை 10 கிலோ இலவச அரிசி தீபாவளி பரிசாக வழங்கப்படுகிறது.
இலவச அரிசி மூட்டையில் துணைநிலை ஆளுநர், முதலமைச்சர் ஆகியோரின் படம் அச்சிடப்பட்டிருந்தது.
No comments